சினிமா

ஆர்யா, ஹன்சிகா இணையும் மீகாமன் : முதல் பார்வை

ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தை இயக்குகிறார் மகிழ்திருமேனி. மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். மீகாமன் ஆர்யா நடிக்கும் முதல் ஸ்டைலிஷான ஆக்ஷன் படம்’ என்கிறார் மகிழ்திருமேனி. தமன் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.  அருண் விஜய் நடித்த தடயற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி.

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

கோலிவுட் பிரபலங்கள் திரண்டுவந்த அமரகாவியம் இசை வெளியீடு: படங்கள்

நடிகர் ஆர்யா தயாரிக்கும் முதல் படம் அமரகாவியம். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். ஜீவா சங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. இசைவெளியீட்டு கோலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நயந்தாரா, த்ரிஷா, பூஜா,விக்ராந்த்,ஸ்ரீகாந்த், சாந்தனு,விஷ்ணு,ராஜூ முருகன்,விஷ்ணுவர்த்தன், உதயநிதி ஸ்டாலின்,பார்த்திபன் வந்திருந்தவர்களில் சிலர்.  

சினிமா

கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

      நடிகர் பார்த்திபன் இயக்கிவரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம், கதையே இல்லாமல் ஒரு சினிமா என்பதை ஒரு வரி செய்தியாகக் கொண்டு தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, அமலா பால், விஷால், சிவகார்த்தியேயன், தாப்ஸி, விஜய் சேதுபதி உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். பல படங்களை இயக்கி அதில் தானும் நடித்திருக்கும் பார்த்திபன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அல்போன்ஸ் ஜோசப், தமன்,… Continue reading கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

சினிமா

ஹிந்தி படம் இயக்கும் விஷ்ணுவர்தன்

பில்லா ரீமேக், ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்போது ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் “யட்சன்” என்ற படத்தை இயக்குவதோடு ஹிந்தியில் படம் இயக்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை தெரிவிப்பதாக கூறினார்.