இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்

குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

செல்வ களஞ்சியமே - 91 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியின் தொகுப்பு இது. சிறு குழந்தைகளுக்கு வரும் ஆனால் அதிகம் தெரிந்திராத அதிகம் கண்டறியப்படாத நோயைப்பற்றிய கட்டுரை. செல்வ களஞ்சியம் தொடரை தொடர்ந்து படிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் என்று எழுதுகிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் பிஸிஜி தடுப்பூசி போட்டவுடன் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது புரியாத புதிராக இருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு. ஐந்தாவது குழந்தைக்கு இந்தத்… Continue reading குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட திருநங்கை சதயச்ரீ சர்மிளா, பாஸ்போர்ட் பெறும் முதல் திருநங்கை என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறார். தமிழகத்தில் பிறந்து மும்பையில் வாழும் சர்மிளா, திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் பணியாற்றிவருகிறார். 33 வயதான இவர், ஆன் லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே இருந்ததால், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் மூன்றாம் பாலினம் இல்லை என்று புகார் செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம்… Continue reading நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

டெல்லி தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து

நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி ஜனநாயகம் காத்த மக்களின் மவுனப்புரட்சி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற… Continue reading டெல்லி தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, மனிதநேய மக்கள் கட்சியின்

மோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள்!

மோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள் என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ’டெல்லி சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜரிவால் அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்… Continue reading மோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள்!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 64 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த முறை, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தன்… Continue reading மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்!