இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் தெனாலிராமன், டமால் டுமீல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.   கிட்டத்தட்ட இரண்டு  ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம்தெனாலிராமன் . பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த சரித்திரப் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் ஃபிலிம் முதன்முறையாக ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தென்னிந்திய பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. நானி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. சசிகுமார் நடிக்கும் பிரம்மன் படத்தை இயக்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக பணியாற்றிய சாக்ரடீஸ். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பது படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

பொங்கல் படங்களான ஜில்லா, வீரம் தியேட்டர்களில் இன்னமும் நல்ல வரவேற்பில் உள்ளன. இந்த நிலையில் சென்ற வாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் பெரிய அளவில் ஸ்டார்கள் இல்லாத கோலி சோடா, மாலினி 22 பாளையங்கோட்டை என இரண்டு படங்கள் வெளியாகின்றன. கோயம்பேடு மார்க்கெட் நம்பி வாழ்க்கை நடத்தும் பதின்ம வயது சிறுவர்கள் வாழ்க்கையைச் சொல்லும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் கோலிசோடா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பயந்து ஒதுங்காமல் எப்படி பழிவாங்குகிறாள் என்பதே… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்

இந்த வாரம் (20-12-2013) பெரிய பட்ஜெட் படங்களான என்றென்றும் புன்னகை, பிரியாணி வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் படமான தலைமுறைகள் இதே நாளில் வெளியாகிறது.  இந்தப் படங்களுடன் இந்தியிலிருந்து தூம் 3 மொழிமாற்றம் ஆகி வெளியாகிறது. ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை காதல், காமெடிக்கு கேரண்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் பிரியாணி, ஆக்‌ஷன் காமெடி படம். ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் கார்த்தியும் வெங்கட்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்