அரசியல், சினிமா

ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச்… Continue reading ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் (நாளை 11-04-2014) நான் சிகப்பு மனிதன், ஆண்டவா காப்பாத்து, காந்தர்வன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. காத்தவராயன் படத்தின் இயக்கநர் சலங்கை துரை இயக்கத்தில் வெளிவரும் அடுத்த படம் காந்தர்வன். படத்தில் கதிர், ஹனிரோஸ், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எதிர்பாராத கிளைமேக்ஸ் கொண்ட காதல் கதை என்கிற படத்தின் இயக்குநர் துரை. பாண்டியநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு, தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விஷால் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். இயக்குநர்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் பண்ணையாரும் பத்மினியும், உ, புலிவால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை. பாடல்கள் ஹிட் ஆகி உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தம்பி ராமையா மற்றும் புதுமுக நடிகர் நடித்திருக்கும் உ நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது. ராதிகாவின் ராடன் மீடியாவின் இணை தயாரிப்பில் விமல், பிரசன்னா, ஓவியா, இனியா,சூரி, தம்பிராமையா நடித்திருக்கும் புலிவால் நகைச்சுவையுடன் த்ரில்லர் கலந்த படம்.

சினிமா

இரண்டு கதாநாயகர்கள் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட்!

இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் படம் ஓடாது என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டையெல்லாம் சமீப கால படங்கள் தகர்த்தெறிந்துவிட்டன. இரண்டு கதாநாயகர்கள் என்கிற நிலைமை போய், மூன்று, நான்கு பேர் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் வந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,என்றென்றும் புன்னகை,ஜில்லா, வீரம் படங்கள் இதற்கு உதாரணம். அந்த வரிசையில் புலிவால் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் விமல், பிரசன்னா கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அனன்யா, இனியா, ஓவியா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத… Continue reading இரண்டு கதாநாயகர்கள் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட்!