அரசியல், தமிழ்நாடு

மீனவர்களுக்கு என தனி அமைச்சகம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்தியில் உள்ள பாஜக அரசு அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கிறது. இலங்கை அதிபரின் அராஜகப் போக்கும், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் 20 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 81 படகுகளையும்… Continue reading மீனவர்களுக்கு என தனி அமைச்சகம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஐநாவில் ராஜபட்ச உரை: எதிர்ப்புத் தெரிவித்து செப்.25-இல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற கருணாநிதி வேண்டுகோள்

இலங்கை அதிபர் ராஜபட்ச, ஐ.நா.வில் பேசும் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று, தமிழர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அதே தேதியில் கருப்புச் சட்டையோ, சட்டையில் கருப்புச் சின்னமோ தமிழர்கள் அணிய வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெசோ கூட்டம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே… Continue reading ஐநாவில் ராஜபட்ச உரை: எதிர்ப்புத் தெரிவித்து செப்.25-இல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற கருணாநிதி வேண்டுகோள்

அரசியல், இலங்கை

இனப்படுகொலை குறித்து இலங்கைக்கு செல்லாமலேயே சிறப்பாக விசாரிக்க முடியும் : நவநீதம் பிள்ளை

இலங்கைக்கு செல்லாமலேயே, அங்கு நிகழ்ந்த ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமாக அதே சமயம் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள மின்னஞ்சல் செய்தியில், விசாரணையின் இறுதியில் அளிக்கப்படும் அறிக்கையின் நம்பகத்தன்மை, நாட்டுக்குள் குழு அனுமதிக்கப்பட்டதா என்பதில் இல்லை,… Continue reading இனப்படுகொலை குறித்து இலங்கைக்கு செல்லாமலேயே சிறப்பாக விசாரிக்க முடியும் : நவநீதம் பிள்ளை

அரசியல், இலங்கை, தமிழ்நாடு

ராஜிவ்காந்தி கொலையில் குமரன் பத்மனாபாவை விசாரிக்கக் கோரும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாபன், கடந்த 2009ஆம் ஆண்டு மலேசியாவில் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. இந்த நிலையில், குமரன் பத்மநாபனை இந்தியா அழைத்து வந்து, ராஜிவ் கொலை குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்யநாராயணா ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த மனு விசாரணைக்கு… Continue reading ராஜிவ்காந்தி கொலையில் குமரன் பத்மனாபாவை விசாரிக்கக் கோரும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, தமிழ்நாடு

இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சரத்குமார், சிவக்குமார், விவேக், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களும், கே.ஆர், கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும்,திரைப்பட விநியோகஸ்தர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்திய இலங்கையை மத்திய… Continue reading இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்