சினிமா

முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத்  தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.   ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உதாரணம் ‘நான் மகான் அல்ல, பாண்டிய நாடு’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் ஒரு தேசிய விருதையும் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர். கடந்த ஆண்டு… Continue reading முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்!

சினிமா

இரண்டு கதாநாயகர்கள் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட்!

இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் படம் ஓடாது என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டையெல்லாம் சமீப கால படங்கள் தகர்த்தெறிந்துவிட்டன. இரண்டு கதாநாயகர்கள் என்கிற நிலைமை போய், மூன்று, நான்கு பேர் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் வந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,என்றென்றும் புன்னகை,ஜில்லா, வீரம் படங்கள் இதற்கு உதாரணம். அந்த வரிசையில் புலிவால் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் விமல், பிரசன்னா கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அனன்யா, இனியா, ஓவியா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு இளைஞர்கள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத… Continue reading இரண்டு கதாநாயகர்கள் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட்!

சினிமா

என்றென்றும் புன்னகை வெற்றி சந்திப்பு படங்கள்

சமீபத்தில் வெளியான ஜீவா, த்ரிஷா, விநய், ஆண்ட்ரியா, சந்தானம் நடித்த என்றென்றும் புன்னகை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஜீவா, விநய், த்ரிஷா, இயக்குநர் அஹமது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்

இந்த வாரம் (20-12-2013) பெரிய பட்ஜெட் படங்களான என்றென்றும் புன்னகை, பிரியாணி வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் படமான தலைமுறைகள் இதே நாளில் வெளியாகிறது.  இந்தப் படங்களுடன் இந்தியிலிருந்து தூம் 3 மொழிமாற்றம் ஆகி வெளியாகிறது. ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை காதல், காமெடிக்கு கேரண்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் பிரியாணி, ஆக்‌ஷன் காமெடி படம். ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் கார்த்தியும் வெங்கட்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்

சினிமா

என்றென்றும் புன்னகை – மூன்று ஹீரோ கதை தமிழில் வெற்றி பெறுமா?

ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை மூன்று ஹீரோக்களை மையாகக் கொண்ட கதை. பொதுவாக ஹாலிவுட், பாலிவுட் படங்களில் 4, 5 ஹீரோக்கள்கூட சேர்ந்து நடிப்பது இயல்பாக நடக்கக்கூடியது. ஆனால் மலையாளம் தவிர, தென்னந்திய படங்களில் 3 ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது அரிதாகவே நடக்கிறது. அப்படியே இணைந்து நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதுவொரு தமிழ் சினிமாவின் சென்டிமெண்டாகவே இருக்கிறது. இதை என்றென்றும் புன்னகை உடைக்குமா என்பதை ரிலீஸுக்குப் பிறகுதான் சொல்லமுடியும்.