வடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம். அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்
Tag: கத்தரிக்காய்
பட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்
தக்காளி, வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் எல்லோராலும் வாங்க முடிகிற, அதே சமயம் சத்தான காய்கறிகளிலிருந்து செய்யும் சமையல் குறிப்பு(புடலை பால் குழம்பு, பாசிபருப்பு சொதி)களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: கத்தரிக்காய் - கால் கிலோ, இஞ்சி - பெரிய துண்டு பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லித் தழை - சிறிதளவு கடுகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்… Continue reading பட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்
சுட்ட கத்திரிக்காய் துவையல்
எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும். ஜெனிவா குறிப்புதான் இதுவும், கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டியவைகள் : கத்தரிக்காய் பெரியது - 2 வெங்காயம் திட்டமான அளவு - 2 வெள்ளை எள் - 2 டீஸ்பூன் புளி - ஒரு நெல்லிக்காயளவு… Continue reading சுட்ட கத்திரிக்காய் துவையல்
எளிய உணவுகள் – கத்திரிக்காய் சாதம்
எளிய உணவுகள் - கத்திரிக்காய் சாதம் குழந்தைகளுக்கு கத்திரிக்காய் என்றுமே கசப்பான உணவுதான். கத்திரிக்காயில் உள்ள சிறிதளவு கசப்புசுவை, சில சமயம் பெரியவர்களுக்குக்கூட பிடிப்பதில்லை. ஆனால் உடல்வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச்சத்துள்ள கத்திரிக்காயை டயட்டில் சேர்க்காமல் இருக்க முடியுமா? சுவையும் சத்தும் குறையாமல் கத்திரிக்காயை சமைத்துக்கொடுத்தால் ஒருவேளை அவர்களுக்குப் பிடிக்கக்கூடும். சரி, இந்த ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். தேவையானவை அரிசி - ஒரு கப் வெள்ளை கத்திரிக்காய் - 3 (பெரியது) தக்காளி - 2 பெரிய வெங்காயம்… Continue reading எளிய உணவுகள் – கத்திரிக்காய் சாதம்
வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு
கத்தரிச்செடி வளர்ப்பு நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காயகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான உணவுகளையும் கத்தரிக்காயை வைத்து சமைக்கலாம். இரும்புச் சத்தும் கால்சியமும் கொண்டது கத்தரிக்காய். வழுதுணங்காய் என்று சங்க இலக்கியங்களில் எழுதப்பட்ட இந்தக் காய், நம் மண்ணுக்கே உரித்தான காய் வகை. என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, கத்தரிச்செடி விதைகள் நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை… Continue reading வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு