தமிழ்மொழி, தொழிற்நுட்பம்

இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

தொழிற்நுட்பம் உலகெங்கும் வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் கணியன்கள்(மென்பொருட்கள்) உருவாக்குவது முதலான கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக்கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின், குறிப்பாக இளந் தலைமுறையினரின் தேவையை நிறைவு செய்யும் விதமாகவும் தகவல் நெடுஞ்சாலையில் கணித்தமிழை விரைந்து பயணிக்க வைக்கும் எதிர்காலத் திட்டங்களை வகுத்திடவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் எண்ணியுள்ளது. அதன் ஒரு… Continue reading இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், ரங்கோலி கோலம்

ரங்கோலி கோலம் போடுவது எப்படி? விடியோ பதிவு

http://youtu.be/Ugb3UvhAow8 கோலம் போடுவது ஒரு அழகியல் சார்ந்த கலை. இன்று நாம் அதை மறந்துவிட்டோம். மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாக முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது கோலக் கலை. காலத்தின் ஓட்டத்தில் அதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம். புள்ளிக் கோலம் கற்பதற்கு சற்றே சிரமமாக இருக்கும், ரங்கோலி கோலம் ஆரம்ப நிலையில் கோலம் கற்பவர்களுக்கு எளிதாக இருக்கும். இந்த தாமரைக் கோலம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...

கண்காட்சி

உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியப் பெண்கள்!

’’பெண்களின் உள்மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லவே முடியாது என்பார்கள். பெண்களின் உள்மனதை அறிய அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்களின் உணர்வுகளை வகைப்படுத்துவதையும் அவை எந்த வகையில் பெண்களை சமூகத்துடன் பிணைக்கின்றன என்பதையும் ஓவியங்கள் வழியே காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” என்கிறார் லதா. சென்னை சோழமண்டல ஓவியக் கலைஞரான லதா, ‘பக்தி’ என்கிற தலைப்பில் தன் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். சென்னை தட்சிணசித்ராவில் வரும் ஆகஸ்ட் 20ந் தேதி முதல் 31 வரை இந்த ஓவியக் கண்காட்சி நடக்கவிருக்கிறது.