அரசியல், இந்தியா

தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள  பாஜக தயங்குகிறது என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், ஆட்சி அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்தால், அது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி மாநில  பாஜக தலைவர் சதீஷ் உபாதயா தெரிவித்துள்ளார். ஆட்சி அமைப்பதா அல்லது தேர்தலை எதிர்கொள்வதா என்பது பற்றி கட்சி மேலிடம் தான்… Continue reading தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா

ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியாணாவில் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘ஹரியாணாவை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசால் மிகவும் மோசமான நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்துக்கு ஹூடா… Continue reading ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

அரசியல், தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளைக் கண் டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் அதிமுகவினரின் யதேச்சதிகார போக்கை கண்டித்துள்ளன. திமுக இதைக் காரணம் காட்டியே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கல்சிகள் இது குறித்து வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதில், உள்ளாட்சி… Continue reading உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆளும் கட்சியினர் அராஜகம் : கொதித்தெழும் எதிர்கட்சிகள்

அரசியல்

பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!

அரசியல் பேசுவோம் மக்களவை தேர்தல் - 2014 தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணியில்லாமல் மக்களவைத் தேர்தலை சந்தித்திராத அதிமுக முதல்முறையாக இவர்களைத் தவிர்த்து தனித்து நிற்கிறது. காரணம் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு இருந்தாலும் பாஜக கூட்டணியில் சேராமல் தவிர்த்துவிட்டது அதிமுக. காங்கிரஸ், திமுக உறவு முடிந்து காங்கிரஸ், அதிமுக கூட்டணி உருவாகலாம் என்கிற நிலைமை வந்தபோதும் அதை தவிர்த்தார் ஜெயலலிதா. தமிழக மக்களிடையே காங்கிரஸுக்கு… Continue reading பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!