சினிமா

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்கார துரை பிரத்யேக படங்கள்!

சினிமா, தமிழ்நாடு

தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம்: த்ரிஷா மறுப்பு

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்  நடிகை த்ரிஷா. தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இணைய தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்தின.  ஆனால் த்ரிஷா இதனை மறுத்து ‘டுவீட்’ செய்துள்ளார்.  ‘‘எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்றே தெரியவில்லை. நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். அப்படிப்பட்ட… Continue reading தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம்: த்ரிஷா மறுப்பு

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, தமிழ்நாடு

இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சரத்குமார், சிவக்குமார், விவேக், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களும், கே.ஆர், கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும்,திரைப்பட விநியோகஸ்தர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்திய இலங்கையை மத்திய… Continue reading இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

சினிமா, Uncategorized

இளையராஜாவின் 1001வது படத்தில் அரவிந்த் ஸ்வாமி கதாநாயகன்!

மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் இளையராஜாவின் 1001வது படம். இந்தப் படம் ஹர்ஷ் தவே தயாரிப்பில், வி.மணிகண்டன் ஒளிப்பதிவில் வித்யாசமான கதையமைப்பில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

சினிமா

சரத்குமார் 60வது பிறந்த நாள்: குடும்பத்துடன் கொண்டாடினார்

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது 60வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். கொண்டாட்டத்தோடு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.