சினிமா

சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் இசை வெளியீடு: சமந்தா சிறப்பு விருந்தினர்!

கன்னடத்தில் வெளியாகி திரைபட விருதுகளையும் மக்களின் ஆதரவையும் பெற்ற லூசியா படம், தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் படமாகிறது. இதில் சித்தார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தீபா சன்னதி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் பிரசாத் ராமர் இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா.      

சினிமா

அஞ்சான் :முதல் பார்வை

சூர்யா, சமந்தா, விதூத் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் ஆகஸ்ட் 15 ரிலீஸாகிறது. படத்தில் விதூத் வில்லனாக அல்ல சூய்ராவின் நண்பனாக வருகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இசை யுவன் சங்கர் ராஜா.

சினிமா

சிங்கள அரசுக்கு ஆதரவான நிறுவனம் தயாரிக்கிறது : விஜய்யின் கத்தி படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,   சமந்தா நடித்து வெளிவர உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை லைகா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு வெளிவருவதற்காக தயாராகி வரும் இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது பேர் சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பரில் படத்துக்கு எதிராக இன்று மனு கொடுத்தனர். மனுவில் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சிங்கள அரசுக்கு நெருக்கமாக உள்ளது என்றும் எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தை ரிலீஸ்… Continue reading சிங்கள அரசுக்கு ஆதரவான நிறுவனம் தயாரிக்கிறது : விஜய்யின் கத்தி படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு

சினிமா, விஜய்

மீண்டும் A .R முருகதாஸ் இயக்கத்தில் விஜய்!

A .R  முருகதாஸ்,  விஜய் இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று கொல்கத்தா காளிகாட் கோவிலில் காலை 11 மணியளவில்  பூஜையுடன் தொடங்கியது. கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்திற்கு  அனிருத் இசைமைக்கிறார்.ஓளிப்பதிவாளர்  ஜார்ஜ்  சி வில்லியம்ஸ், படத்தொகுப்பு - ஸ்ரீகர்  பிரசாத், கலை இயக்குனர்  - லால்குடி  இளையராஜா, சண்டைப் பயிற்சி  - அனல் அரசு