அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, தமிழ்நாடு

இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சரத்குமார், சிவக்குமார், விவேக், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களும், கே.ஆர், கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும்,திரைப்பட விநியோகஸ்தர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்திய இலங்கையை மத்திய… Continue reading இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

சினிமா

சரத்குமார் 60வது பிறந்த நாள்: குடும்பத்துடன் கொண்டாடினார்

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது 60வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். கொண்டாட்டத்தோடு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.  

சினிமா, Uncategorized

ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 'நம்பியார்' படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் 'நம்பியார்'. ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார். 'நம்பியார்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில்… Continue reading ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

சினிமா, பெண் இயக்குநர், பெண் கலைஞர்கள்

ராதிகா மகள் ரேயான் நடிக்க வருகிறார்!

நடிகை ராதிகா மகள் ரேயான், தற்போது லண்டனில் படித்துவருகிறார். சில வருடங்களுக்கு முன் சற்றே கனமான தோற்றத்தில் இருந்த ரேயான், இப்போது உடல் மெலிந்திருக்கிறார். நடிகையின் சாயலில் இருக்கும் ரேயானைப் பார்த்த திரையுலகைச் சேர்ந்த பலர் நடிக்க அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. படித்து நாடு திரும்பியதும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நடிப்பார் என்கிறது ராதிகாவுக்கு நெருக்கமான வட்டாரம்.

அரசியல், சினிமா

ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தாங்கும் நமீதா!?

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும்,  சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும்  சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது - "நான் திருச்சியில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை  நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள். ஆமாம் ஆர்வமுள்ளது என்று பதிலளித்தேன். எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள்... இப்போதைக்கு சொல்லமுடியாது.… Continue reading ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தாங்கும் நமீதா!?