சமையல், சைவ சமையல்

சௌசௌ என்னும் பெங்களூர் கத்தரிக்காய் கூட்டு

ருசி காமாட்சி மகாலிங்கம் இதில் பலவித கூட்டு, கறி, துவையல்,பஜ்ஜி என்று வகைவகையாகத் தயாரிக்கலாம். அவியல், சாம்பார், தயிர் பச்சடி என்றும் ஜமாய்க்கலாம். இது குளிர் இருக்கும் மலைப்பிரதேசங்களில்  அதிகம் பயிராகிறது.  இந்தக்காயை முதன்முதலில் சீமைக் கத்தரிக்காய் என்றுதான் எங்களுக்குத் தெரியும். அதுவும் பெங்களூரில் அதிகமாக்க் கிடைக்கும். அடுத்து காட்மாண்டுவில் இது அதிகமாக வீட்டிலேயே கொடி படர்ந்து காய்த்துக் கொண்டிருந்தது. இப்பவும் பிள்ளை வீட்டில் இது வளர்த்துக் காய்க்காத வருஷங்களே இல்லை. இதற்கு நேபாலியில் என்ன பெயர்… Continue reading சௌசௌ என்னும் பெங்களூர் கத்தரிக்காய் கூட்டு

கீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பாலக் பனீர் செய்வது எப்படி?

ருசி காமாட்சி மகாலிங்கம் எல்லாம் வடமாநில குறிப்புகள் என்கிறீர்களா? வீட்டில் குழந்தை, பெரியவர்கள் என்று எல்லோரும் விரும்புவதால் ஹோட்டலுக்குப் போகாமல், வீட்டிலே செய்வதால் மனம் லயித்துச் சாப்பிட முடிகிறது. பனீர் பால் சம்பந்தமானது. வீட்டில் செய்வதால் புத்தம் புதியதாகக் கிடைக்கும். ருசியும் அதிகம். ரொட்டி பூரியுடன் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். சாம்பார், ரசம் என்றவைகளுக்கு ஒரு மாறுதலாக இதையும் செய்து பாருங்கள். பிரியாணி, புலவு வகைகளுடனும் செய்பவர்களும் உண்டு. உங்கள்… Continue reading பாலக் பனீர் செய்வது எப்படி?

சமையல், செய்து பாருங்கள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு

கத்தரிச்செடி வளர்ப்பு நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காயகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான உணவுகளையும் கத்தரிக்காயை வைத்து சமைக்கலாம். இரும்புச் சத்தும் கால்சியமும் கொண்டது கத்தரிக்காய். வழுதுணங்காய் என்று சங்க இலக்கியங்களில் எழுதப்பட்ட இந்தக் காய், நம் மண்ணுக்கே உரித்தான காய் வகை. என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, கத்தரிச்செடி விதைகள் நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை… Continue reading வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு

சமையல், சமையல் குறிப்பேடு, தரவிறக்கிக் கொள்ள

சமையல் குறிப்பு எழுத அழகிய குறிப்பேடு

‘எங்க அம்மா சமைச்சதுபோல இல்லையே’ என நம்மில் நிறையபேர் அம்மாவின் சமையலுக்காக ஏங்கியிருப்போம். சாம்பார், ரசம் என்றாலும் அம்மாவின் கைவண்ணத்தில் பிரத்யேக சுவை, மணத்துடன் அவை தயாராகும். அதற்குப் பிறகு, நாமாக யூகித்து அதுபோல சாம்பார் வைக்க முயற்சி செய்தால் அதே ருசியும் மணமும் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற அம்மாவின் சமையல் குறிப்பு நமக்குக் கிடைத்தால் ஆனந்தம்தானே! அதேபோல, முன்பெல்லாம் ஒரு குடும்பத்திற்கென்றே சில ஸ்பெஷலான சமையல் ரெசிபிகள் இருந்தன.… Continue reading சமையல் குறிப்பு எழுத அழகிய குறிப்பேடு