சினிமா

சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் இசை வெளியீடு: சமந்தா சிறப்பு விருந்தினர்!

கன்னடத்தில் வெளியாகி திரைபட விருதுகளையும் மக்களின் ஆதரவையும் பெற்ற லூசியா படம், தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் படமாகிறது. இதில் சித்தார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தீபா சன்னதி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் பிரசாத் ராமர் இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா.      

சினிமா

ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போனதால் ’சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய சித்தார்த்

இன்று வெளியாக இருந்த ஜிகிர்தண்டா படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. பீட்சா படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ளனர். சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி திட்ரையரங்குகளில் நன்றாக போய்கொண்டிருப்பதால் ஜிகிர்தண்டா பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக தயாரிப்பாளர் கதிரேசன் தரப்பில் கூறப்படுகிறது. கதிரேசன், தனுஷை வைத்து ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட வெளியீட்டை தள்ளிப்போட்டதை ஊருக்கே… Continue reading ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போனதால் ’சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய சித்தார்த்

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

‘வாங்க மக்கா வாங்க’ ஏ. ஆர். ரஹ்மானின் காவியத்தலைவன் பாடல் ஐட்யூனில் வெளியீடு

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் காவியத்தலைவன் படத்துக்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவர் இசையமைத்த ‘வாங்க மக்கா வாங்க’ என்ற ஒரு பாடல் மட்டும் ஐட்யூனில் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் நாராயணன் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு மறைந்த ரகுராம் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.

சினிமா, சினிமா இயக்குநர்

ஜிகிர்தண்டா – மதுரையை மையமாகக் கொண்ட மற்றொரு கேங்க்ஸ்டர் படமா?

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த சிறப்பு பேட்டி... ஜிகிர்தண்டா மதுரையை களமாகக் கொண்ட மற்றொரு படமா? “நிச்சயம், இது அந்தவகையில் வரும் படம் அல்ல. இது கேங்க்ஸ்டர் கதைதான், எந்த ஊரை மையமாகக் கொண்டு எடுத்திருக்கலாம். ஆனால், மதுரை இளைஞர்கள் எளிதாக வன்முறை… Continue reading ஜிகிர்தண்டா – மதுரையை மையமாகக் கொண்ட மற்றொரு கேங்க்ஸ்டர் படமா?

சினிமா

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ ஒரே நாளில் நடக்கும் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர்!

இருளும் ஒளியும், மேடும் பள்ளமும், உறவும் பகையும், இன்பமும் துன்பமும் இணைந்தே இருப்பவை. அதுபோல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணமும் கெட்ட குணமும் இணைந்தே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்றபடி குணம் வெளியே தெரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள இந்த நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம்தான் 'கடவுள் பாதி மிருகம் பாதி'. உலகநாயகனால் பேசப்பட்ட இந்த வசனம் மிகப் பிரபலமானது. இந்த தலைப்பை… Continue reading ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ ஒரே நாளில் நடக்கும் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர்!