சுற்றுச்சூழல்

சீமைக்கருவேல மரங்கள் ஏன் கூடாது?

ஞா.கலையரசி தமிழகம் முழுக்க சாலையின் இருபக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் விளைநிலம் மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்துப் பரவிக்கிடக்கும் மரத்தின் பெயர் சீமைக்கருவேலம்.  இதற்குக் காட்டுக் கருவை, வேலிக்காத்தான், டெல்லி முள் என்ற பெயர்களும் உண்டு. நம் மண்ணைத் தாயகமாகக் கொண்ட கருவேல மரத்துடன் இதனைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதன் தாவரப் பெயர் அகசியா நிலோடிகா(Acacia Nilotica). மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இதன் பெயர், ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora). . பார்த்தீனியத்தைப் போல இதன்… Continue reading சீமைக்கருவேல மரங்கள் ஏன் கூடாது?

சுற்றுச்சூழல்

கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

ஞா. கலையரசி இந்தியா முழுமையும் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற நாட்களில் பட்டம் விடுவது பாரம்பரியமான விளையாட்டு.  சிறுவர் முதல் பெரியவர் வரை வித விதமான உருவங்களில் வண்ணமயமான  பட்டங்களை வானில் பறக்கவிட்டு, ரசித்து மகிழ்ந்த காலம் மலையேறி, இன்றைக்குப் பட்டம் பறக்க விடுதல் என்பது, மற்றவரின் பட்டத்தை அறுத்து விடுதல் என்ற சண்டையாக மாறியிருக்கிறது.  மற்றவரின் துன்பத்தில், இன்பங் காணும் மனநிலை பெருகியிருக்கிறது! மற்றவர்களின் பட்டத்தைப் பாதியில் அறுத்து விட்டுத் தன்னுடையதை மட்டும், உயரே… Continue reading கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

அனுபவம், சுற்றுச்சூழல், மருத்துவம்

மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

ஞா. கலையரசி வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம் கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள்,… Continue reading மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

சுற்றுச்சூழல்

பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது!

ஞா. கலையரசி காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை.  மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன். நேச்சர் பார் எவர் தளத்தில் ‘பறவைகளும் உப்பும்,’ (Birds & Salt) என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசித்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. இது நாள் வரை நல்லது செய்வதாக நினைத்து, என் அறியாமையால், இவற்றுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன்.  ஏற்கெனவே… Continue reading பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது!

இயற்கை எழுத்து, சுற்றுச்சூழல்

வண்ணத்துப்பூச்சிகள்: நூல் அறிமுகம்

ஞா. கலையரசி வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு ஆசிரியர்: டாக்டர் ஆர்.பானுமதி க்ரியா வெளியீடு முதற் பதிப்பு – ஜனவரி 2015 விலை ரூ.295. தொலைபேசி: 044-4202 0283 வண்ணத்துப்பூச்சியைப் பற்றித் தமிழில் வெளியாகும் முதல் கையேடு என்ற சிறப்பைப் பெற்றது இந்த நூல். இப்பூச்சி ஒன்றைக் கண்டவுடன், அதன் இனம், குடும்பம், பண்பு, ஆங்கிலப்பெயர் ஆகியவற்றை அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவும்.  களத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 90 இனங்களைப் பற்றிய… Continue reading வண்ணத்துப்பூச்சிகள்: நூல் அறிமுகம்