அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்: ஜெயலலிதா நம்பிக்கை

தன் மீதான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தோ, நீதிபதி பற்றியோ யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா வழியில், எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான், அந்த இருவரின் வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். எனது வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் மீதுள்ள பாசம், பற்று, அன்பின்… Continue reading மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்: ஜெயலலிதா நம்பிக்கை

அரசியல், தமிழ்நாடு

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரிய மனு வாபஸ்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பொது நலன் மனு வாபஸ் பெறப்பட்டது. பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தில் அமைந்துள்ள சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சத்ய நாராயணா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமின் மனு நிலுவையில் இருப்பதால், தமிழக சிறைக்கு மாற்றக் கோரும் மனுவை திரும்பப் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அரசியல், தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த, ஸ்ரீ ரங்கம் தொகுதி தற்போது பிரதிநிதியின்றி இருப்பதாக அறிவிக்கக் கோரி சட்டசபைச் செயலருக்கு தி.மு.கவின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயலலிதா தற்போது முதலமைச்சராக இல்லாத நிலையில், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், காவல் நிலையங்கள், அம்மா குடிநீர், உப்பு போன்ற அரசுத் தயாரிப்புகள் ஆகியவற்றிலிருந்து அவரது படத்தை நீக்கும்படியும் தி.மு.க கோரியுள்ளது. இது தொடர்பாக தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் சட்டசபை செயலருக்கு… Continue reading ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

அரசியல், இந்தியா

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை: முதல்வர் சித்தராமையா

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு கர்நாடக சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டுமென்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் இருந்துதமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை.மாறாக, இந்தவிவகாரத்தில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும். ஜெயலலிதாவை விடுதலை செய்ய… Continue reading ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை: முதல்வர் சித்தராமையா

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுப்பு!

ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து… Continue reading ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுப்பு!