சினிமா

ஆர்யா, ஹன்சிகா இணையும் மீகாமன் : முதல் பார்வை

ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தை இயக்குகிறார் மகிழ்திருமேனி. மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். மீகாமன் ஆர்யா நடிக்கும் முதல் ஸ்டைலிஷான ஆக்ஷன் படம்’ என்கிறார் மகிழ்திருமேனி. தமன் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.  அருண் விஜய் நடித்த தடயற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி.

சினிமா

கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

      நடிகர் பார்த்திபன் இயக்கிவரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம், கதையே இல்லாமல் ஒரு சினிமா என்பதை ஒரு வரி செய்தியாகக் கொண்டு தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, அமலா பால், விஷால், சிவகார்த்தியேயன், தாப்ஸி, விஜய் சேதுபதி உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். பல படங்களை இயக்கி அதில் தானும் நடித்திருக்கும் பார்த்திபன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அல்போன்ஸ் ஜோசப், தமன்,… Continue reading கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

சினிமா

வாலு – முதல் பார்வை

சிம்பு, ஹன்சிகா, சந்தானம்,விடிவி கணேஷ் நடிக்கும் வாலு  நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிவருகிறது. இயக்கம் : விஜய் சந்தர் இசை : தமன் ஒளிப்பதிவு: ஷக்தி படத்தொகுப்பு: டி.எஸ்.சுரேஷ் தயாரிப்பு : எஸ். எஸ். சக்ரவர்த்தி

சினிமா

இதற்குத்தானே ஆசைப்பட்டார் கேபிள் சங்கர்?

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ள படம் ‘தொட்டால் தொடரும்.‘ தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை -பி.சி சிவன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “ இது ஒரு லவ் ஆக்ஷன் த்ரில்லர் முதல் பாதி லவ் ரொமான்ஸ் என்றும் மறுபாதி ஆக்ஷன் என்றும்… Continue reading இதற்குத்தானே ஆசைப்பட்டார் கேபிள் சங்கர்?

சினிமா, சினிமா இசை

தயாநிதி அழகிரி தயாரிப்பில் அருள்நிதி!

மெளனகுரு படத்திற்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட அருள்நிதி அடுத்து நடிக்க ஒப்புக்கொண்ட படம் தகராறு. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு சம்பவம் என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது தகராறு என்று மாற்றியிருக்கிறார்கள். பூர்ணா கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். படத்தை தம்பிக்காக தயாரித்திருக்கிறார் தயாநிதி அழகிரி. சிம்பு, தருண்கோபியிடம் பணியாற்றிய கணேஷ் வினாயக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள் இதோ...