சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

சினிமா

உன் சமையல் அறையில் : முதல் பார்வை

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன சால்ட் அன் பெப்பர் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் உருவாக்கிவருகிறார் பிரகாஷ்ராஜ். தமிழில் உன் சமையலறையில் என உருவாகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு இணையாக நடிக்கிறார் ஸ்நேகா. படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஊர்வசி, சம்யுக்தா, பூர்ணா, தம்பி ராமையா ஆகியோர் துணைகதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. ஒளிப்பதிவு ப்ரீத்தா.  

சினிமா

மீண்டும் ஒரு சினிமா கதை!

சினிமா வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களையும் நடிகர்களையும் வைத்து சினிமா எடுப்பது லேட்டஸ்ட் டிரெண்ட் ஆகியுள்ளது. அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் படம் திரைப்பட நகரம். செந்தில், முத்து, ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய 6 நண்பர்களும் சென்னையில் ஒரு அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி, நண்பர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வாடகை கூட வாங்காமல் அவ்வப்பொழுது அவர்களுக்கு உணவும் தந்து உதவுகிறார். புரொடக்ஷன் மேனேஜர் தம்பி ராமையாவும் அவர்களுக்கு பல… Continue reading மீண்டும் ஒரு சினிமா கதை!