பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாப்பு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாப்பு, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர்.மேலும், ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை அவர் பெற்றுள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஸ்ரீ ராமராஜ்யம் படத்தை எழுதி, இயக்கியவர் இவர். இயக்குநர் பாப்பு மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு… Continue reading பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்
Tag: நயன்தாரா
தனுஷ் – விஜய் சேதுபதி இணையும் நானும் ரவுடி தான்!
இரண்டு முன்னணி கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் ஒரு முன்னணி கதாநாயகன் இன்னொரு முன்னொரு கதாநாயகனின் படத்தை தயாரிப்பது புதிது. வேலையில்லா பட்டதாரியின் வெற்றிக்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தை தயாரிக்கிறார் தனுஷ் . இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க, அனிருத் இசையில், போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
நயன்தாரா, அதர்வாவுக்கு சிறந்த நடிகர்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருது!
61வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படத்துக்கான விருதை தங்க மீன்கள் பெற்றுள்ளது. சிறந்த நடிகராக பரதேசி படத்துக்காக அதர்வா பெறுகிறார். சிறந்த நடிகைக்கான விருதை ராஜா ராணி படத்துக்காக நயன்தாரா பெறுகிறார். இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு வழங்கப்படுகிறது.
உதயநிதி, நயன்தாரா,சந்தானம் மீண்டும் கூட்டணி!
இது கதிர்வேலன் காதல் படத்திற்குப் பிறகு உதயநிதி, நயன்தாரா, சந்தானம் மீண்டும் நண்பேன்டா என்ற படத்தில் இணைய இருக்கிறார்கள். எம். ராஜேஷிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஏ. ஜெகதீஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
உதயநிதி, நயன்தாரா நடிக்கும் ’இது கதிர்வேலன் காதல்’ : பிரத்யேக படங்கள்
கொஞ்சம் சினிமா