சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

சினிமா

திருமுருகன் இயக்கத்தில் மீண்டும் பரத், வடிவேலு!

திருமுருகன் இயக்கத்தில் பரத் வடிவேலு நடித்து சூப்பர் ஹிட்டான படம் எம் மகன். அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இது பற்றி இயக்குனர் திருமுருகன், ’’மெட்டி ஒலி மூலம் எனக்கு கிடைத்த புகழ் எம் மகன் படத்திற்கும் கிடைத்தது. அதுபோல இப்போது நாதஸ்வரம் தொடருக்கு கிடைத்திருக்கும் புகழ் அடுத்த இயக்கவிருக்கும் படத்திற்கும் கிடைக்கும். இப்படத்தின் தலைப்பு மற்ற நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்கிறார்.