ஞா. கலையரசி இந்தியா முழுமையும் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற நாட்களில் பட்டம் விடுவது பாரம்பரியமான விளையாட்டு. சிறுவர் முதல் பெரியவர் வரை வித விதமான உருவங்களில் வண்ணமயமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு, ரசித்து மகிழ்ந்த காலம் மலையேறி, இன்றைக்குப் பட்டம் பறக்க விடுதல் என்பது, மற்றவரின் பட்டத்தை அறுத்து விடுதல் என்ற சண்டையாக மாறியிருக்கிறது. மற்றவரின் துன்பத்தில், இன்பங் காணும் மனநிலை பெருகியிருக்கிறது! மற்றவர்களின் பட்டத்தைப் பாதியில் அறுத்து விட்டுத் தன்னுடையதை மட்டும், உயரே… Continue reading கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!
Tag: பறவைகள்
பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது!
ஞா. கலையரசி காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை. மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன். நேச்சர் பார் எவர் தளத்தில் ‘பறவைகளும் உப்பும்,’ (Birds & Salt) என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசித்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. இது நாள் வரை நல்லது செய்வதாக நினைத்து, என் அறியாமையால், இவற்றுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். ஏற்கெனவே… Continue reading பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது!
அழியும் பறவையினங்கள்!
இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது. உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக்… Continue reading அழியும் பறவையினங்கள்!
குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!
செல்வ களஞ்சியமே - 69 ரஞ்சனி நாராயணன் சென்றவாரம் சொன்ன ‘கொழு கொழு கன்னே’ கதை பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பலர் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். கதை கலந்த பாடல்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பாடல் உண்டு. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம்; ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துதாம்; மூணு குடம் தண்ணி ஊத்தி மூணே பூ பூத்துதாம்; நாலு குடம் தண்ணி ஊத்தி… Continue reading குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!
நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க
நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் - குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பூநாரைகள் ஆங்கிலப் பெயர்: flamingo (ஃபிளமிங்கோ) உடலமைப்பு : இதன் கால்கள் நீண்டு குச்சிபோல் இருக்கும். உடல் கொக்குனுடையதைப் போல் இருக்கும். இதன் அலகு நீண்டு வளைந்திருக்கும். நிறம் : கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், பக்கவாட்டில் உள்ள இறக்கையில் வெளிர்சிவப்புநிறமும், கருமையும் தூவி விட்டார்போல் இருக்கும். உடல் வெண்மையாக இருக்கும். அலகு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். வகைகள்: கிரேட்டர், லெஸ்ஸர் என்ற இருவகைகள் உண்டு.… Continue reading நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க