அரசியல், இந்தியா

தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள  பாஜக தயங்குகிறது என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், ஆட்சி அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்தால், அது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி மாநில  பாஜக தலைவர் சதீஷ் உபாதயா தெரிவித்துள்ளார். ஆட்சி அமைப்பதா அல்லது தேர்தலை எதிர்கொள்வதா என்பது பற்றி கட்சி மேலிடம் தான்… Continue reading தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா

ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியாணாவில் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘ஹரியாணாவை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசால் மிகவும் மோசமான நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்துக்கு ஹூடா… Continue reading ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

அரசியல், தமிழ்நாடு, Uncategorized

தமிழகத்தை பாஜக ஆளும் காலம் நெருங்கி வருகிறது – பொன் ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைப் பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது, பாஜக தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது என்று  மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து, கோவையில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுக தலைமையின் மீதுள்ள பாசம் காரணமாக உணர்ச்சியால், தொண்டர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பு. ஆனால் அது பொதுமக்களை பாதிப்பதாக இருந்துவிடக் கூடாது. தமிழகத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது தமிழக… Continue reading தமிழகத்தை பாஜக ஆளும் காலம் நெருங்கி வருகிறது – பொன் ராதாகிருஷ்ணன்

அரசியல், இந்தியா

பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் வெறும் 49 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சியை கலைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், தனிபெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்… Continue reading பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சோதனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி

மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 பயிர்களை சோதனை முறையில் பயிரிட மத்திய அரசின் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் பலவித நோய்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கூட்டணி அரசு மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தபோது, கடும் எதிர்ப்பு ஏற்படவே, அந்த… Continue reading மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சோதனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி