அரசியல், சினிமா, தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இன்று அம்மா அம்மம்மா, நம்ம கிராமம் என்ற இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே குடும்ப கதைகளை மையமாகக் கொண்டவை. குழந்தைக்கும் அம்மாவுக்குமான பாசத்தை மையப்படுத்திய படம் அம்மா அம்மம்மா. சரண்யா,சம்பத் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். நம்ம கிராமம் தேசிய விருதுபெற்ற படம். அக்ரஹாரத்தில் நடக்கும் கதை. படத்தின் நாயகன் நிஷாந்த், நாயகி சம்ருதா இருவரும் புதுமுகங்கள். சுகுமாரி, ஒய்.ஜி. மகேந்திரன், பாத்திமா பாபு, நளினி ஆகியோருடன் இயக்குநர் மோகன் சர்மாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூகம், சினிமா, பெண்ணியம்

ஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்!

நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும் பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான்  'நம்ம கிராமம்' படம். இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன. ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு-- சொல்லாத அளவுக்கு… Continue reading ஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்!