சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

வடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம்.  அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை  மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

அரசியல், வணிகம்

டீசல், பெட்ரோல்,வெங்காயம்,பீன்ஸ் எகிறும் விலைவாசி!

 மத்திய அரசால் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலையேற்றங்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே செல்கிறது. எல்லா தரப்பு மக்களையும் பாதித்திருக்கும் இந்த விலையேற்றத்தை குறைக்க அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் வெப்பச் சலனம் ஏற்பட்டதை அடுத்து வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அக்டோபர் மாதத்தில் ரூ. 100ஐ எட்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். விலை… Continue reading டீசல், பெட்ரோல்,வெங்காயம்,பீன்ஸ் எகிறும் விலைவாசி!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 26 பீன்ஸ் தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்ட பீன்ஸ், ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று பீன்ஸ்.இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸை உற்பத்தி செய்கிறது. மலைப் பிரதேசங்களில் விளையும் செடிவகையிலிருந்து கிடைக்கும் இளம் காய்களே உணவில் பயன்படுத்தப்படுகின்றன. சமைக்காமலும் சமைத்தும் இந்தக் காய் உணவாகிறது. சிறந்த பீன்ஸை இனம் காண்பது எப்படி? இளம் காய்களே… Continue reading பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு

ஸ்பானியர்களுக்குப் பிடித்த குடமிளகாய் இந்தியாவுக்கு வந்த கதை!

காய்கறிகளின் வரலாறு –  5 குடமிளகாய் தென் அமெரிக்க நாடான சிலி மிளகாயின் தாயகம். மிளகாயின் ஒரு வகையான குடமிளகாயின் பூர்வீகமும் அதுவே. தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்திருந்த ஸ்பானியர்கள் உருளைக்கிழங்கு, மக்காள்சோளம், பீன்ஸ் இவற்றோடு மிளகாயையும் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினர். போர்த்துக்கீசியர் மூலம் மிளகாய் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் அறிமுகமானது. காரச்சுவைக்காக மிளகாயின் பெரும்பாலான வகைகள் பயன்படுகின்றன.  தனிச்சிறப்பான மணத்திற்காகவும் காரச் சுவை குறைவாக இருப்பதாலும் குடமிளகாய் மட்டும் ஒரு காய்கறியாக உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.… Continue reading ஸ்பானியர்களுக்குப் பிடித்த குடமிளகாய் இந்தியாவுக்கு வந்த கதை!

காய்கறி சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், விருந்து சமையல்

வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி!

ருசிக்க வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி தேவையான பொருட்கள் (3 பேருக்கு) அரிசி - 2 கப் தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி - ஒரு இன்ச் துண்டு பூண்டு - 8 பல் பீன்ஸ் நீளவாக்கில் வெட்டியது - ஒரு கைப்பிடி கேரட் நீளவாக்கில் வெட்டியது - ஒரு கைப்பிடி உருளைக்கிழங்கு நீளவாக்கில் வெட்டியது - ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி பச்சை மிளகாய்… Continue reading வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி!