மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்க பான் கார்டு அவசியம். சில குறிப்பிட்ட ஃபண்டுகளை பான் கார்டு இல்லாமலும் தொடங்க முடியும். பான் கார்டு இருக்கிறவர்கள் நிதி ஆலோசகர்களை அனுகினால் நீங்கள் கேட்கும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பித்துத்தருவார்கள். இதனுடன் KYC எனப்படும் நோ யுவர் கஸ்டமர் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முறைப்படுத்துவதற்காக இந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஆலோசகர்கள் இல்லாமல் நேரடியாகவும் சில இணையதளங்கள் மூலமும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பிக்கலாம். பெரும்பாலாக மியூச்சுவல் ஃபண்ட்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி?
Tag: பொருளாதாரம்
25 ஆண்டுகளுக்குப் பின் தங்க உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சியது ரஷ்யா!
25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க உற்பத்தியில் அமெரிக்காவை முறியடித்துள்ளது ரஷ்யா. சீனா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக தற்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது ரஷ்யா. 2013 ஆம் ஆண்டில் 254 241 டன் தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாக ரஷ்ய தங்க உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் தங்கம், இயற்கை எரிவாயு, இயற்கை எண்ணெய் போன்றவை புவியியல் கண்டுபிடிப்புகளாக கொள்ளப்படுவதால் அவற்றிற்கு வரி விதிப்பதில்லை. கடந்த 5 வருடங்களில் 270 கனிம சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது ரஷ்யா.
திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?
உறவுகள் மேம்பட கல்யாணமான முதல் ஒரு வருடம் ரொம்ப முக்கியமான காலகட்டம். அந்த சமயத்தில் உணர்ச்சிவசப்படாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலே, இனிமையான இல்லறத்துக்கு பலமான அஸ்திவாரம் போட்டு விட்டதாக அர்த்தம்! அதன்பிறகு, எப்படிப்பட்ட பிரச்னையையும் சுலபமாக ஊதித் தள்ளிவிட முடியும். திருமணவாழ்க்கையில் பிரச்னை என்பது முக்கியமான நான்கு விஷயங்களால்தான் வருகிறது. உணர்வுகள், பொருளாதாரம், சமூகம், செக்ஸ் இவைதான் அந்த நான்கு. 1. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள், புரிய வையுங்கள்! உடம்புக்கு முடியாமல் தான் படுத்திருக்கும்போது, ‘என்னாச்சும்மா? டல்லா… Continue reading திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?
‘4 பெண்கள்’ எதற்காக?
வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி. நம் வீடுகளில் இன்னும் 5 ஆண்டுகளில் இணைய பயன்பாடு அத்தியாவசியமான விஷயமாகப் போகிறது. இதுவரை ஆண்களின் கைகளில் இருந்த இந்த அற்புத கண்டுபிடிப்பை இனி அதிகம் பயன்படுத்தப்போவது பெண்கள்தான்! பெண்களுக்கான விஷயங்கள் தமிழில் கிடைப்பது மிக மிகக் குறைவு. ஆங்கிலத்தில் கடலளவு பரந்துவிரிந்திருக்கும் விஷயங்களில் ஒரு சிறு அளவுக்காவது தமிழில் தர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே ‘4 பெண்கள்’ என்ற இந்த வலைதளம். பொதுவாக பெண்கள் எழுதும் வலைதளம் என்றாலே… Continue reading ‘4 பெண்கள்’ எதற்காக?