சுற்றுச்சூழல்

‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை!’

ஞா. கலையரசி வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது! தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae. இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால்… Continue reading ‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை!’

சுற்றுச்சூழல்

துளிர்க்க துளிர்க்க வெட்டப்படும் அழகுச் செடிகள் நிழல் தருமா?

ஞா. கலையரசி இன்றைய காலக்கட்டத்தில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று குரலெழுப்புவதற்குப் பதிலாக, இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடுவது அவசியத் தேவையாயிருக்கிறது; அவசரமும் கூட. காலநிலை மாற்றத்திற்கும், மரங்களுக்கும் உள்ள பிணைப்புப் பற்றியும், சுற்றுச்சூழலுக்கும், மரங்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவு பற்றியும், வாய்கிழிய பேசுகின்றோம்; மரமின்றி மழையில்லை, மழையின்றி நீரில்லை; சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் இவ்வாண்டு அதிகளவில் மரணம் என்றெல்லாம் புலம்புகின்றோம். ஆனாலும் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பலியானது போக, எஞ்சி… Continue reading துளிர்க்க துளிர்க்க வெட்டப்படும் அழகுச் செடிகள் நிழல் தருமா?