இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்

குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

செல்வ களஞ்சியமே - 91 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியின் தொகுப்பு இது. சிறு குழந்தைகளுக்கு வரும் ஆனால் அதிகம் தெரிந்திராத அதிகம் கண்டறியப்படாத நோயைப்பற்றிய கட்டுரை. செல்வ களஞ்சியம் தொடரை தொடர்ந்து படிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் என்று எழுதுகிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் பிஸிஜி தடுப்பூசி போட்டவுடன் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது புரியாத புதிராக இருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு. ஐந்தாவது குழந்தைக்கு இந்தத்… Continue reading குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பெண்களின் சுகாதாரம், மருத்துவம்

பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி?

செல்வ களஞ்சியம் – 79 ரஞ்சனி நாராயணன் செல்வ களஞ்சியமே இந்த வாரம் கொஞ்சம் வேறு வழியில் போகிறது. அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல தொடரும். சென்ற வாரம் நண்பரின் மகள் பெரியவளாகிவிட்டாள் என்ற செய்தி தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் என் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். எனக்கு நன்றி கூறியவரின் குரலில் என்னளவு சந்தோஷம் தொனிக்கவில்லை. ‘இன்னும் வயசே ஆகலைங்க அதுக்குள்ள...’ என்றார். ஒரு அம்மாவிற்கே உரிய கவலையுடன். உண்மைதான். நம்மூரில் பெண் குழந்தை பிறக்கும்போதே கவலையும்… Continue reading பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி?

அனுபவம், பெண், மருத்துவம்

இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்!

இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படும் ஒருவகை மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று. அதென்ன ஸ்டாக்ஹோம் சின்ரோம்? கடத்தப்பட்டவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே ஏற்படும் ஒரு வகையான நேர்மறையான உறவே ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படுகிறது. 1973ல் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளைக்காரர்கள், 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 6 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அந்த பிணைக்கைதிகள், தங்களை பிடித்து வைத்திருந்த கொள்ளையர்களுக்கு எதிராக வழக்கு… Continue reading இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்!

மருத்துவம்

இந்தியாவில் 42 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி!

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் புற்றுநோய் பாதித்து 42 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் மட்டும் 20.9% பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7.13 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 95 ஆயிரம் பேரும், பீகாரில் 3 லட்சத்து 73 ஆயிரம் பேரும் கடந்த 4 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். மாறிவரும் வாழ்க்கைச் சூழலே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவம்

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மூலமாக எபோலா வைரஸ் காய்ச்சல் இங்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதன்படி சென்னை விமான நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. நேற்று இரவு நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன்… Continue reading நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி