சுற்றுச்சூழல்

‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை!’

ஞா. கலையரசி வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது! தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae. இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால்… Continue reading ‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை!’

இன்றைய முதன்மை செய்திகள், சுற்றுச்சூழல்

‘’பொன்னென மலர்ந்த கொன்றை”

ஞா.கலையரசி ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு மரமுழுக்க பொன்மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும் கொன்றை, நம் மண்ணின் மரங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதன் தாவரப்பெயர் Cassia fistula Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள்:- ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, கடுக்கை, கவுசி, கொண்டை, கொன்னை, சமிப்பாகம், சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன். தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் என்பதால், வெப்பத்தையும், வறட்சியையும்… Continue reading ‘’பொன்னென மலர்ந்த கொன்றை”

இன்றைய முதன்மை செய்திகள், சமையல்

முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்

ஞா.கலையரசி முடக்கத்தான் கீரையின் தாவரப் பெயர் - Cardiospermum halicacabum மூட்டு வலியை இது குணமாக்குகிறது; எனவே தான் இதன் பெயர் முடக்கற்றான் என்பது நம் மக்களின் நீண்ட கால நம்பிக்கை. பழந்தமிழகத்தில் இதற்கு உழிஞைக் கொடி என்று பெயர்; நாட்டு மருத்துவத்தில், தமிழர் பயன்படுத்தி வரும் முக்கிய தாவரங்கள் என்ற அட்டவணையில் இது இடம் பெற்றிருக்கின்றது. (ஆதாரம் - தாவரவியல் அறிஞர், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்’) இதன் காய்கள் முப்பட்டை வடிவத்தில் பலூன்… Continue reading முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்