சர்ச்சை, சினிமா, சின்னத்திரை, தமிழ்சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

விஜய் விடி விருது விழாவில் இயக்குநர் ராம் தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமிக்கு ஏன் விருது தரவில்லை என்று கேட்டது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிறு விஜய் டிவியில் விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விருது விழாவில் பேசிய அனைத்தும் விடியில் ஒளிபரப்பானதா என்பது பற்றி நிறைய ரசிகர் கேட்டதால் தன்னுடைய முகப்புத்தகத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் ராம்... ‘Director Ram பக்கத்திற்கு இப்போது வரை வந்த மின்னஞ்சல்கள், என் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்கள் மற்றும்… Continue reading விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய் டிவி அவார்டு தரும் ரகசியம்!

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குநர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார். தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக ‘நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த… Continue reading விஜய் டிவி அவார்டு தரும் ரகசியம்!

சினிமா

நீயா நானா தயாரிப்பாளர் ஆன்டனியின் கோலிவுட் எண்ட்ரி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியின் தயரிப்பாளர் ஆன்டனி சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். தனது மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் அழகு குட்டிச் செல்லம் படத்தை தயாரிக்கிறார் ஆன்டனி. சார்லஸ் இயக்குகிறார்.  அகில், கிரிஷா, சிம்பா, கருணாஸ், தம்பி ராமைய்யா, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சுரேஷ், இனிது இனிது நாராயணன், எங்கேயும் எப்போதும் வினோதினி, பரதேசி  ரித்விகா, மீரா கிருஷ்ணன், சேத்தன், தேஜஸ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சார்லஸ் இந்தப் படத்தைப் பற்றி, ‘குழந்தைகள்… Continue reading நீயா நானா தயாரிப்பாளர் ஆன்டனியின் கோலிவுட் எண்ட்ரி!

சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

நட்சத்திரங்கள் திரளும் விஜய் டிவியின் விருது விழா!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கமல் ஹாசன், விஜய், சூர்யா, நயன் தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்வில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் கோபிநாத்தும் தேவதர்ஷிணியும்.

சினிமா, சின்னத்திரை, திருமணம், தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷிணிக்கு இன்று திருமணம்!

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷிணி, தன் நண்பர் ஸ்ரீகாந்தை இன்று மணக்கிறார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் சென்னையில் இன்று நடக்கவிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார் திவ்யதர்ஷிணி. இன்று இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் திவ்யதர்ஷிணியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பல சினிமா பிரபலங்கள் இதில் பங்கேற்று இருக்கின்றனர்.