அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, தமிழ்நாடு

இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சரத்குமார், சிவக்குமார், விவேக், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களும், கே.ஆர், கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும்,திரைப்பட விநியோகஸ்தர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்திய இலங்கையை மத்திய… Continue reading இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

சினிமா

விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்: சரித்திர படத்தில் நடிக்கிறார்கள்!

சிம்புதேவன் அடுத்து இயக்கவுள்ள விஜய்யின் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதி. இது சரித்திர படமாக உருவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ருதி, விஷாலுடன் பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா

சிங்கள அரசுக்கு ஆதரவான நிறுவனம் தயாரிக்கிறது : விஜய்யின் கத்தி படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,   சமந்தா நடித்து வெளிவர உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை லைகா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு வெளிவருவதற்காக தயாராகி வரும் இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது பேர் சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பரில் படத்துக்கு எதிராக இன்று மனு கொடுத்தனர். மனுவில் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சிங்கள அரசுக்கு நெருக்கமாக உள்ளது என்றும் எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தை ரிலீஸ்… Continue reading சிங்கள அரசுக்கு ஆதரவான நிறுவனம் தயாரிக்கிறது : விஜய்யின் கத்தி படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

சூர்யா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பலமான பேச்சு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குமுதம் வார இதழ் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கருத்து கணிப்பு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி அஜித் ரசிகர்கள் அஜீத்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சமூக வலைதளங்களில் முழங்கினார்கள். நடிகை த்ரிஷா ஒரு விழாவில் பிடித்த நடிகர்கள் வரிசையில் அஜீத்தின் பெயரை முதலில் சொன்னதற்காக விஜய் ரசிகர்கள் அவர் மேல் கோபப்பட்டார்கள். இந்நிலையில் நேற்று நடந்த… Continue reading சூர்யா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்!

சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

நட்சத்திரங்கள் திரளும் விஜய் டிவியின் விருது விழா!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கமல் ஹாசன், விஜய், சூர்யா, நயன் தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்வில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் கோபிநாத்தும் தேவதர்ஷிணியும்.