இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, விளையாட்டு

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் ஜெயலலிதா

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு பணத்தை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத் தொகையையும் மேசைப்பந்து ஆண்கள்… Continue reading காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் ஜெயலலிதா

இன்றைய முதன்மை செய்திகள், உலகம், விளையாட்டு

நகராட்சி பள்ளியில் படித்த தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 4 வது நாளில், 77 கிலோ எடைப்பிரிவு, பளுதூக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். இவர் வேலூர் சத்துவாச்சாரியில் பின்புலம் எதுவும் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து நகராட்சிப் பள்ளியில்… Continue reading நகராட்சி பள்ளியில் படித்த தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்!

இந்தியா, சர்ச்சை, விருது, விளையாட்டு

எனக்கோ ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கத்திற்கு இன்னும் விருது பணம் தரவில்லை: சாய்னா நெய்வால் ஆதங்கம்

சானியா மிர்சா தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு விதங்களில் சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நெய்வால் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துக்கள். அதே சமயத்தில் என்னுடைய ஆதங்கத்தையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2010ல் நடந்த ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வெண்கல பதக்கத்திற்கு தருவதாக ஆந்திரா அறிவித்த பரிசு பணம் இன்னும் எனக்கு வரவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். சாய்னாவும் தற்போதை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது… Continue reading எனக்கோ ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கத்திற்கு இன்னும் விருது பணம் தரவில்லை: சாய்னா நெய்வால் ஆதங்கம்

இந்தியா

தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதராக சானியா மிர்ஸா நியமனம்!

தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டார்.தெலங்கானா மாநிலத்தின் நலன்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஊக்குவிக்கும் விதமாக சானியா மிர்ஸா செயல்படுவார். நல்லெண்ண தூதருக்கான நியமன கடிதம் மற்றும் ரூ.1 கோடிக்கான காசோலையை சானியா மிர்ஸாவிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பெற்றோர் தேவை?

செல்வ களஞ்சியமே - 71 ரஞ்சனி நாராயணன் சென்ற பத்தியில்  பார்த்த டைகர் மாம் - என்னும் ரொம்பவும் கண்டிப்பான அம்மாவின் குணாதிசயங்கள் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்: கோபமாக என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். உண்மையில் குரலை உயர்த்திப் பேசுவதனால் ஒன்றும் நடக்காது. நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாக சொல்வது பலன் தரும். குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழிக்க மாட்டார்கள். குழந்தைகள் ஏதாவது கடினமான வீட்டுப்பாடங்கள், இல்லை பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றால் நீயே செய்… Continue reading குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பெற்றோர் தேவை?