சினிமா

சூரி கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஷால்!

'பூஜை' படத்துக்கான வரவேற்பைப் பார்ப்பதற்காக மதுரைக்கு விசிட் அடித்த நடிகர் விஷால், சூரி மகனுக்குப் பிறந்த நாள் என்பதை அறிந்து ராஜாக்கூர் கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். விஷாலை பார்த்ததும் ராஜாக்கூர் கிராமமே ஆனந்தத்தில் கொண்டாட, சூரி குடும்பத்தினரும் நெகிழ்ந்து போனார்கள். கடந்த 27ம் தேதி சூரி மகன் சர்வானுக்கு முதல் பிறந்த நாள். தனது சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் மகனின் பிறந்த நாளைக் மிக எளிமையாகக் கொண்டாடினார் சூரி. “என் மகன் சர்வான். அம்பட்டுச்… Continue reading சூரி கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஷால்!

சினிமா

அரண்மனை வெற்றி கொண்டாட்டம்: படங்களுடன்

சமீபத்தில் வெளியான நகைச்சுவை கலந்த திகில் படமான அரண்மனை வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை படத்தின் இயக்குநர் சுந்தர் சி அடங்கிய குழு, கேக் வெட்டி கொண்டாடியது. ஆமபள படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் விஷாலும் கலந்துகொண்டார்.

சினிமா

நடிகர் விஷாலின் பதிய முயற்சிகள்!

நடிகர் என்பதோடு தயாரிப்பாளராக பாண்டிய நாடு படத்தின் மூலம் அறிமுகமானார் விஷால். படம் நன்றாக ஓடியதும். அடுத்து நான் சிகப்பு மனிதன், பூஜை படங்களை தயாரித்தார். பூஜை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலை தன் நண்பர் விஷ்ணு நடித்த ஜீவா படத்தை வாங்கியதன் மூலம் விநியோகிப்பாளராகவும் மாறினார். இப்போது வி மியூசிக் என்ற பெயரில் இசை வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தான் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆவதை… Continue reading நடிகர் விஷாலின் பதிய முயற்சிகள்!

சினிமா

விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்: சரித்திர படத்தில் நடிக்கிறார்கள்!

சிம்புதேவன் அடுத்து இயக்கவுள்ள விஜய்யின் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதி. இது சரித்திர படமாக உருவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ருதி, விஷாலுடன் பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.