சமையல், மாலை நேர சிற்றுண்டி

குழந்தைகளை வடை சாப்பிட வைப்பது எப்படி?

இதென்ன விநோதமான தலைப்பு என அம்மாக்கள்(அப்பாக்களும்கூட) கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் பாக்கெட்டில் அடைபட்ட உருளைக்கிழங்கு சிப்ஸை நொறுக்கும் குழந்தைகள், சத்துமிக்க வடையை விரும்புவதில்லை. கருவேப்பிலை இருக்கிறது, வெங்காயம் இருக்கிறது என குழந்தைகள் ஒரு வாய்க்குக்கூட சாப்பிடுவதில்லை. என் மகனும் அப்படியே... ஒரு முறை வடை மாவை அரைத்துவிட்டு, கருவேப்பிலை, வெங்காயம் இன்னபிற பொருட்களை சேர்ப்பதற்கு பதிலாக பருப்புடன் இவறைச் சேர்த்து அரைத்து வடை சுட்டேன். பிரமாதமாக வந்தது.  மகன் விரும்பி சாப்பிடுகிறான். எனக்கும்கூட இந்த வடை… Continue reading குழந்தைகளை வடை சாப்பிட வைப்பது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல்

சிக்கன் தொக்கு – எளிய செய்முறை

அவசரத்துக்கு அசைவம் சமைக்க விரும்புகிறவர்கள் நாடுவது சிக்கனைத்தான். சிக்கன் சமைப்பதிலும் நேரம் அதிகம் செலவாகுமே என்பவர்களுக்கு இந்த எளிய செய்முறை... தேவையானவை: சிக்கன் - கால் கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிட்டிகை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி பட்டை, லவங்கம் - தலா 2 துண்டுகள் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான… Continue reading சிக்கன் தொக்கு – எளிய செய்முறை

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

தேவையானவை: கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்) - ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்… Continue reading சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

முருங்கை கீரை உளுந்து போண்டா!

மாலை நேர சிற்றுண்டி தேவையானவை: உளுந்து - ஒரு கப் முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கருவேப்பிலை - 1 ஈர்க்கு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்வது எப்படி? உளுந்தை 2 மணிநேர ஊறவைத்து, மிக்ஸியில் போண்டா மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும். முருங்கைக் கீரையை அலசி பொடியாக நறுக்கவும். இதேபோல வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கழுவி பொடியாக நறுக்கவும். இவற்றை அரைத்த… Continue reading முருங்கை கீரை உளுந்து போண்டா!

அரசியல், வணிகம்

டீசல், பெட்ரோல்,வெங்காயம்,பீன்ஸ் எகிறும் விலைவாசி!

 மத்திய அரசால் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலையேற்றங்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே செல்கிறது. எல்லா தரப்பு மக்களையும் பாதித்திருக்கும் இந்த விலையேற்றத்தை குறைக்க அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் வெப்பச் சலனம் ஏற்பட்டதை அடுத்து வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அக்டோபர் மாதத்தில் ரூ. 100ஐ எட்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். விலை… Continue reading டீசல், பெட்ரோல்,வெங்காயம்,பீன்ஸ் எகிறும் விலைவாசி!