சினிமா

மீண்டும் நடிக்க வருகிறார் ஷ்ரியா ரெட்டி

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து விஷாலுடன் திமிரு, வசந்தபாலனின் வெயில்,பிரியதர்ஷனின் காஞ்சீவரம் படங்களில் நடித்தவர் ஷ்ரியா ரெட்டி. நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்ட ஷ்ரியா தன் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தார். தற்சமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்டாவைக் காணோம் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார். கிராமத்தில் நடக்கும் கதையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அளித்த பேட்டியில் கதை காரணமாகவே நடிக்க ஒப்புக் கொண்டதாக சொல்கிறார் ஷ்ரியா. JSK ஃபிலிம் கார்ப்பொரேஷன் இந்தப்… Continue reading மீண்டும் நடிக்க வருகிறார் ஷ்ரியா ரெட்டி

சினிமா

முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத்  தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.   ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உதாரணம் ‘நான் மகான் அல்ல, பாண்டிய நாடு’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் ஒரு தேசிய விருதையும் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர். கடந்த ஆண்டு… Continue reading முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்!

சினிமா, விருது

காவியத் தலைவன் சுதந்திரப் போராட்டத்தையும் பேசுவான்!

வெயில், அங்காடித் தெரு, அரவான் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் புதியபடம் காவியத்தலைவன். வசந்தபாலனின் வெயில் திரைப்படம் மூன்று ஃபிலிம்பேர் விருதுகளையும், சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற படம். அப்படம் இந்தியன் பனோராமாவிற்கு தேர்வு செய்யப்பட்டதோடு, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது. உலக அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில், சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது. உலக அளவிலான பல்வேறு… Continue reading காவியத் தலைவன் சுதந்திரப் போராட்டத்தையும் பேசுவான்!