அரசியல், இந்தியா

முதல்வர் மீது ஷூ வீச்சு: வேலையில்லா இளைஞர் ஆத்திரம்

பஞ்சாப் மாநிலத்தில் இஸ்ரூ கிராமத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது வேலையில்லா பட்டதாரி இளைஞர் ஒருவர் தனது காலணியை வீசினார். அந்தக் கூட்டத்தின்போது உரையாற்ற எழுந்த பாதல் மீது அந்த ஷூ வீசப்பட்டது. எனினும் அது அவர் மீது படாமல் மேடைக்குச் சற்றுத் தள்ளி விழுந்தது. ஷூ வீசியவர் பெயர் விக்ரம் (23), அவர் பர்னாலா நகரத்தைச் சேர்ந்தவர். ஷூ வீசியதோடு மட்டுமல்லாமல் முதல்வருக்கு எதிராகக் கோஷமும் எழுப்பினார்.… Continue reading முதல்வர் மீது ஷூ வீச்சு: வேலையில்லா இளைஞர் ஆத்திரம்

சினிமா

ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போனதால் ’சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய சித்தார்த்

இன்று வெளியாக இருந்த ஜிகிர்தண்டா படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. பீட்சா படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ளனர். சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி திட்ரையரங்குகளில் நன்றாக போய்கொண்டிருப்பதால் ஜிகிர்தண்டா பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக தயாரிப்பாளர் கதிரேசன் தரப்பில் கூறப்படுகிறது. கதிரேசன், தனுஷை வைத்து ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட வெளியீட்டை தள்ளிப்போட்டதை ஊருக்கே… Continue reading ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போனதால் ’சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய சித்தார்த்

சினிமா

தனுஷ் படத்தில் சிம்பு பட டிரெய்லர்!

எஸ்.எஸ். சக்கிரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் படம் ‘வாலு’. நாளை வெளியாகவுள்ள தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் போது, வாலு படத்தின் டிரைலர் திரையரங்குகளில் போடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை

தனுஷ்,  அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சென்ற வாரம் படத்தின் இசை வெளியீடு நடந்தது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.