அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

கேரளத்துடன் இணைந்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராட்டம்: வைகோ அறிவிப்பு

தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று வைகோ பேசினார். அப்போது, 'உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பற்றிப் பேசும் பிரதமர் மோடி, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கி ரூ.1500 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளார். இதை குஜராத், வட மாநிலங்களில் நிறுவ முடியுமா? ஏற்கெனவே அஸ்ஸாம், கேரளம், கர்நாடகத்தில் விரட்டி அடிக்கப்பட்ட திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்துகிறார்கள். இதில், 8 லட்சம் டன் பாறைகளை ஆயிரம்… Continue reading கேரளத்துடன் இணைந்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராட்டம்: வைகோ அறிவிப்பு

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா

இலங்கை உடனான ராஜ்ஜிய உறவு குறித்த விஷயத்தில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவற்றின் நிலைப்பாடு ஒரேமாதிரியானதுதான்!காங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டது! இலங்கை தமிழரின், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிங்கள் என்று  மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழகத்தில் முதலில்… Continue reading கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா

அரசியல், தமிழ்நாடு

ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது : ராஜபட்ச உரை குறித்து வைகோ

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொடிய கொலைகாரன், குற்றங்களை விசாரிக்க வேண்டிய நீதிபதி மீதே குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அவமானக் கேடு ஐ.நா.சபையில் நேற்று  நிகழ்ந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அதிபர் மகிந்த ராஜபட்ச பன்னாட்டு நீதிவிசாரணைக்கு ஆளாக வேண்டிய குற்றவாளி ஆவான். அத்தகைய கொடியவன் ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில், ஐ.நா. அமைப்பையே குற்றம் சாட்டியதும், இலங்கையில்… Continue reading ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது : ராஜபட்ச உரை குறித்து வைகோ

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

சென்னையில் 11 அடுக்கு கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 18 ஆனது

சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கத்தில் நேற்று முன் தினம் கட்டப்பட்ட நிலையில் இருந்த 11 அடுக்கு கட்டடம் இடிந்து தரை மட்டமானது. கட்டடம் இடிந்து இடுபாடுகளில் சிக்கிய கட்டட தொழிலாளர் 18 பேர் உயிரிழந்தனர். 22 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டட தொழிலாளர்களில் சிலர் சீமாந்திரா, ஒடிசா மாரிலத்தைச் சேர்ந்தவர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜி.கே. வாசன், வைகோ, பொன். ராதாகிருஷ்ணன், சீமாந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்தை… Continue reading சென்னையில் 11 அடுக்கு கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 18 ஆனது